Tuesday, May 19, 2026

மே 2026

 ஆடு பாம்பே! விளையாடு பாம்பே! (2 முறை)

நம் பட்டறிவு கேட்டறிவு பகுத்தறிவு  இயல்பூக்கம்  முன்னோர் வாசத்தால்  (2 முறை)

         ஐம்புலன்கண் நுழைவோரை உள்ளுக்குள் சுரப்போரை/

                            உள்ளுக்குள் இருப்போரை/ வாழ்க்கை முடிவுகளை (2 முறை)

இக்கண சமயத்தே முழுமையாய் நோக்கி (2 முறை)

உள்கடந்து சும்மாயிரு, நீ உள்கடந்து சும்மாயிரு! (2 முறை)

இயற்கைப் பேரறிவால்  சான்றோர் ஞானத்தால் (2 முறை)

உந்தன் சித்தத்தால் முழுமையாய் நோக்கி (2 முறை)

நான் கரைந்து ஆடு! நீ நான் கரைந்து ஆடு (2 முறை)

ஆடு பாம்பே! விளையாடு பாம்பே! (2 முறை)

இன்னபிற காலத்தே         நமையாளும் அவயவம் போற்றி 

          செய்யற்குகா செயாது            செயற்கரிய செய்வித்து 

ஆடு பாம்பே! விளையாடு பாம்பே! 


No comments:

Post a Comment