Sunday, December 17, 2023

கணினி விசைப்பலகை பொத்தானில் மூன்றாவது குறியீட்டை எவ்வாறு அடிப்பது? How to type the third symbol in a computer keyboard key?

To access or type 

Second symbol     இரண்டாவது குறியீடு             Shift +

Third symbol        மூன்றாவது குறியீடு                Ctrl + Alt +   அல்லது Alt Gr + 

Thursday, December 14, 2023

திசம்பர் 23 ஹைக்கூக்கள்

 ஆற்றை அள்ளி வீட்டைக் 

          கட்ட, வெள்ளம் கொண்டு 

                      போனது ரோட்டை.



கும்மிருட்டு புயலின் ஆட்டம்

              அமைதியைக் கலைத்தது

                            தவளையின் கனைகுரல்.



கொடிக்குக் கீழ்

           மணல் உதிர்ந்திற்று

காயப்போடும் நெகிழி.

Saturday, July 15, 2023

சூலை ஹைக்கூ

கூட்டை விட்டு வெளியேறிய

            பூச்சி --- மூச்சை அடைத்த 

கூடு. -- சூலை 2023

Saturday, March 25, 2023

சிவந்த கந்தல்

     துணி நெருங்கி வந்தது

இறந்த பூனை

-- 25 மார்ச் 2023

Sunday, March 19, 2023

மாம்பூக்களின் வாசம் 
    
       கலைந்து இன்று 

மரத்தின் வாசம்

-- 19 மார்ச் 2023

Wednesday, March 8, 2023

மார்ச் ஹைக்கூ

கறை படியாத செம்மை

கையில் தோய்ந்த 

கொசுவின் இரத்தம் -- மார்ச் 2023

Sunday, January 15, 2023

வேலி கதிர்க்குருவி அவதானித்தல்

துள்ளி மறைந்தது, புதரில் 

               ஒன்று இங்கு  -- நீண்ட கடும்

பயணத்தில் ஓர் அமைதி. 

-- சனவரி 2023 [When observing Blyth's Reed Warbler in my backyard bush]










Sunday, September 18, 2022

செப்டம்பர் 22 ஹைக்கூ

காரணம்

யாரிடமும் சொல்ல வில்லை

           மின் விசிறியைச்  சுற்றியிருந்த

                    சேலையைத் தவிர. 

(Deeply affected by the suicide of a passed-out student; his pristine face and his mother's cry during procession cannot be easily forgotten)


இனிய காலைப் 

      பொழுது புலர்ந்தது

            அன்று ஞாயிறு 

Sunday, April 3, 2022

ஏப்ரல் 2022 ஹைக்கூ

 நெடிய குரலின் அழைப்பு

         நீண்ட அலகில் கரு

                 வேப்பிலைத் தேன்

(Intrigued by the long call of the Loten's Sunbird [Cinnyris lotenius], I rushed out and saw find him feeding on the nectar from the cluster-like white flowers of the Curry tree [Murraya koenigii])

   

            

Monday, December 27, 2021

டிசம்பர் 2021 ஹைக்கூ

உணவின் வலசை 

     வாலாட்டியின் அலகில்

தட்டான்

(Written when a Western Yellow Wagtail captured a skimmer dragonfly -- both are migratory)