புலனைந்து வழி நுழையுஞ் சமயம்
நான் பட்ட, கேட்ட அறிவினால்
முன்னோர் வாசம், சான்றோர் ஞானத்தால்
இயற்கைப் பேரறிவின்பால்
முக்காலத்திற்கும் முழுதாய் அவதானித்து
அக்கணம் அந்நிலையை
சந்திக்கச் செய்வாயே, உள்ளுணர்வே!
இயனறிவு பட்டறிவு கேட்டறிவினால்
முன்னோர் வாசத்தால் பயனேதுமில்
ஐம்புலன்கண் நுழைமின் அதை
அக்கண சமயம்
முக்காலத்திற்கும் முழுமையாய் நோக்கி
சான்றோர் ஞானத்தால் இயற்கைப் பேரறிவால்
உந்தப்பட்டு ஆடுவாய் உள்ளுணர்வே!
இன்னபிற காலத்தே நமையாளும்
அவயவம் போற்றி
செய்யற்குகா செயாது
செயற்கரிய செய்விப்பாய் அடிமனமே!
No comments:
Post a Comment