Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, June 28, 2025

சூன் 2025 கவிதைகள்

நடுநிசியில் விழித்து  புரண்டு புரண்டு படுத்து,  

              நீண்ட நேரமாக கவிதை எழுத யோசனை ---  


கை கால் எட்டாத இடங்களில் எல்லாம்

            ஆழ்ந்த பதிவுகளைச் செய்தது கொசு.


உறக்கம் வரவில்லை,   கவிதை? 

Thursday, March 13, 2025

2025 மார்ச்சு கவிதை

1.      துரோகம் தீர்த்தல்                                            2.      தூய சொத்து

மரத்தின் கீழ்                                                                            ஓயாத ஓசையும் வெண்ணலையும்

மஞ்சள் நிழலாய் வீழும்                                                                        அடையும் ஆற்றங் கரையில்

கூர்மணம் அடிக்கும் ஒரு                                                                      முகில் நோக்கி ஓடும் மீன் பார்க்க

கொன்றைப் பூவிலிருந்து இன்னொன்று                                       எனைக் கண்ட நீயும் நின் மகவும்

மீண்டும் இன்னொன்று எனத்                                                             நாய்களும் பேய்களும் உண்டதுபோக

தாவிடும்                                                                                                       கூம்புக்குழியில் நானிட்ட நூற்றில்

தேனியைப் பார்த்திருந்தேன்.                                                            கடல்மீள் குஞ்சுகள்


எனக்கில்லை எனில் வேறு                                                                 சூட்டாலும்கூட இனம் மாறும் எனில்

யார்க்கும் கூடாது --                                                                                விருப்பத்தால் (உன்) இனம் மாறிட்டால்

கூடவே கூடாது.                                                                                        தூய்மை கெட்டிடுமோ

கத்தியோ அமிலமோ வேறு எதுவோ                                            உயிர்ப்பலி கேட்டிடுமோ? (space)

எது சரியோ அது.                                                                                    இரவைப் பகலாக்கும் மாடமோ

என் தலை வெடிக்க நாளம் முறுக்கேற                                        மாளிகையோ

தாவிடும்                                                                                                    சீறிப்பாயும் சிவிங்கி போன்ற உந்தோ

தேனியைப் பார்த்திருந்தேன்.                                                        பன்னூறு கோடிகளோ, அதை விடவும்


சுவிட்டெனப் பாய்ந்தது                                                                    புங்கம் பூவுதிரும் இதே காலத்தில்

வேதிவால் குருவியொன்று --                                                          சில நூறு ஆண்டிற்பின்

அதே காலம் அதே மரம்                                                                    என் இனத்தை உன் இனம்

மீண்டும் தாவிடும்                                                                                இதே இடத்தில் இதேபோல்

தேனியை                                                                                                 சந்தித்தலே

நீண்டவால் ஆட                                                                                     எழு தலைமுறை சொத்தாம். 

கொத்திச் செல்வதைப் பார்த்திருந்தேன்.


கத்தியின்றி அமிலமின்றி 

நீதி வழங்கிய தேவதையை.  

Saturday, February 22, 2025

2025 பிப்ரவரி கவிதை

  1.

             விண்ணில் வழி கண்டு 

நீரில் கூடும் வரித்தலை வாத்தே!

                    நீயறிந்த பாதைதனில்

        தனையறியுந் தந்திரங் காணா(து) 

தரணியாளுந் தகுதியுடை

                    மாந்தர் உளரோ!

2.

   தோல்குருவீ!

    ஆட்டத்தில் இழந்து 

    விலையாக உயிர் தரத் துடிக்கும் 


    குழியில் வீழ்ந்த 

     (இவ்) எறும்பைக் காத்திட 

     வழி ஏதேனும் 


     முக்கடல் தாவி மும்மாதம் கடந்து 

     நீ வந்த பாதைதனில் 

     உளதா என


     பரந்த இவ்வேரிக் கரையில்

     தன் கன்றைக் காக்க 

     முறைத்து நிற்கும் எருமைகளிட்ட சாணம் 

     கால்படுமுன் கூறிவிடு.

     

ஜன்னல் கம்பிகள்

10 செமீ நடுவில் எத்தனை பகுவல்கள்

சிலந்தி வலை


கம்பிளி பத்தவில்லை ஜனவரி இரவுகள்

முழு வேகத்தில் மின்விசிறி 

பிப்ரவரி 3






Saturday, February 1, 2025

பிப்ரவரி 2025

1                புயலும் பூகம்பமும்                                                                     After the cyclone, 

                        பெருவெடிப்பும் ஆனபின்பு                                  Quake and the big bang  

                பள்ளி கேட் மூடப்பட்டது                                                              School gate closes

2               நெடுநேரமாய் ஒடுங்கி                                                          From its deep            

                            இருந்த அந்து படபடத்தது                                                     Dormancy the moth flutters 

                மின்விசிறி அருகே                                                            Near the fan

3      இடுக்கில் நுழைந்தது                                             Inned through gap  

                            பெரு வண்டு. பகுவலின் உச்சம்                Big beetle. Fractal's height

          சிலந்தி வலை                                                             Spider web       

4      வாகன விளக்குகளின் கடல்                                             Sea of vehicle lights 

                    முன்னும் பின்னும், என் பாய்மரம் --                            Behind and ahead, my sail -- 

          மாலை வெள்ளி                                                                Evening star

 5.     வயிறு நிறைந்ததோ குப்பைத்                         Unfilled belly or did 

                தொட்டி நிறைந்ததோ   ---                           Trash bin fill   ---

         பார்சல் டப்பாக்கள் .                                               Parcel cans.

                

              

Wednesday, October 2, 2024

அக்டோபர் 2024 ஹைக்கூ

 

உணவைக் கவ்வி நின்றது 

     இலை கதிர்க்குருவி அதுவும் நோக்கியது 

அவனும் நோக்கினான் -- வலசை. 


(அசாமின் போடோ நிலப்பகுதியிலிருந்து வலசையின் பொருட்டு வந்திருக்கக் கூடிய ஓர் இலை 

கதிர்க்குருவியும்  [Greenish Warbler] அதே நிலப்பகுதியிலிருந்து பிழைப்பிற்காகத் தமிழகம் 

வந்துள்ள ஓர் இளைஞனும் ஒருவரையொருவர் சந்தித்தால் ... என்ற கற்பனையில் உதித்த 

ஹைக்கூ)





Thursday, August 15, 2024

ஆகத்து 2024 ஹைக்கூ

 கண்கவர் அங்காடி 


உறைக்குள் முழு முந்திரி 



ஊரும் வெண்புள்ளி



(வெண்புள்ளி -- வெள்ளை நிறங்கொண்ட சிறு புழு)


Thursday, December 14, 2023

திசம்பர் 23 ஹைக்கூக்கள்

 ஆற்றை அள்ளி வீட்டைக் 

          கட்ட, வெள்ளம் கொண்டு 

                      போனது ரோட்டை.



கும்மிருட்டு புயலின் ஆட்டம்

              அமைதியைக் கலைத்தது

                            தவளையின் கனைகுரல்.



கொடிக்குக் கீழ்

           மணல் உதிர்ந்திற்று

காயப்போடும் நெகிழி.

Saturday, July 15, 2023

சூலை ஹைக்கூ

கூட்டை விட்டு வெளியேறிய

            பூச்சி --- மூச்சை அடைத்த 

கூடு. -- சூலை 2023

Sunday, January 15, 2023

வேலி கதிர்க்குருவி அவதானித்தல்

துள்ளி மறைந்தது, புதரில் 

               ஒன்று இங்கு  -- நீண்ட கடும்

பயணத்தில் ஓர் அமைதி. 

-- சனவரி 2023 [When observing Blyth's Reed Warbler in my backyard bush]










Sunday, September 18, 2022

செப்டம்பர் 22 ஹைக்கூ

காரணம்

யாரிடமும் சொல்ல வில்லை

           மின் விசிறியைச்  சுற்றியிருந்த

                    சேலையைத் தவிர. 

(Deeply affected by the suicide of a passed-out student; his pristine face and his mother's cry during procession cannot be easily forgotten)


இனிய காலைப் 

      பொழுது புலர்ந்தது

            அன்று ஞாயிறு 

Sunday, April 3, 2022

ஏப்ரல் 2022 ஹைக்கூ

 நெடிய குரலின் அழைப்பு

         நீண்ட அலகில் கரு

                 வேப்பிலைத் தேன்

(Intrigued by the long call of the Loten's Sunbird [Cinnyris lotenius], I rushed out and saw find him feeding on the nectar from the cluster-like white flowers of the Curry tree [Murraya koenigii])

   

            

Monday, December 27, 2021

டிசம்பர் 2021 ஹைக்கூ

வாலாட்டியின் அலகில்

தட்டான் --

உணவின் வலசை

(Written when a Western Yellow Wagtail captured a skimmer dragonfly -- both are migratory)

Sunday, October 31, 2021

அக்டோபர் ஐக்கூ

 காம்பு அசைந்தது ஒரு 

          மந்தாரைப் பூ பூத்தது

                   ஊர்த் தேன்சிட்டு  ----  அக்டோபர் 2021

Sunday, April 25, 2021

இன்றைய ஹைக்கூ

அசைந்தபடி மண்ணில் 

வீழ்ந்தது நெற்று 

தவிட்டுக்குருவி -- மார்ச் 2021


                                                       கரையோரக் கருவேலம்புதரில் 

                                       இங்குமங்கும் தெரிந்தது 

             என்ன கதிர்குருவியோ!                                                              -- ஏப்ரல் 2021


Tuesday, October 6, 2020

இயற்கை குறித்த சில வரிகள்

புள்ளி மூக்கனின் வாழ்விடம் 

 

 

 

குஞ்சுகளுடன் வாத்து 

                   வெளியேறியது -- 

ஏரிக்குள் வீடு   --- 10 Oct '20

 

 

 

 

குஞ்சுகளுடன் வாத்தின் 

         அணிவகுப்பு 

இடிபாட்டிற்குள் ஏரி  --- 10 Oct '20




___________________________________________________________________________________

பட்டாசு ஆரவாரம் தெரிந்தது

       மருந்து வைப்பவரின் 

உடல் மேல்  -- 11 Oct '20

___________________________________________________________________________________


நள்ளிரவு அமைதி 

    மரத்தின் வாசம் கலைந்தது 

          மின்விசிறியால்    --- 08 Oct '20

midnight silence 

     tree's scent dispersed

by fan

__________________________________________________________________________________


        அச்சம்
 அழியுமோ மாறுமோ பல்லுயிரியம் 

       தழைத்தன ஏரியில் 

             புல்லும் புதரும்  -- Oct. '20



Wednesday, September 23, 2020

முரண்

 

கருமேகம் கொண்டு வந்தது
இடியுடன் கூடிய ---
இருளை மட்டும்.            23.09.'20

Saturday, September 21, 2019

ஹைக்கூ செப்டம்பர் 2019

1.      ஈரசுவற்றை நோக்கி தவளை 
              தத்திச் சென்றது காகம் ---
                   என் பார்வை தொல்லை (20.9.19)





2. பொறி நாகணவாய்
                             கூட்டின் பொருள்கள் மெல்ல 
               மறைய --- ஒரு நாள் 
   மரமும் வெட்டப்பட்டது (20.9.19)




3.      மகனைப் பார்க்கிறேன் 
               புரியவில்லை ----
                     என் வயதில் அவன் 


மகனைப் பார்க்கிறேன் 
       புரிந்தது ----
              அவன் வயதில் நான் 


4.       சத்தம் கேட்டு எங்கிருந்தோ 
                 வந்தது கதிர்குருவி 
                        மாமரத்தில் நெளியும் புழுக்கள்




Saturday, December 25, 2010

பேரவலம்

ஒரு கொசுவும் ஒரு ராக்ஷச பக்ஷியும்

தன் ஒரு வயிறுக்கு மட்டும்
கேட்கிறது அந்த சிறு உயிரு,
குடம் குடமாய்ப் பருக வேண்டுமாம்
அந்த ராக்ஷச பக்ஷிக்கு.

தன் இனத்தைக் காக்க வேண்டும்

அந்த சிற்றுயிருக்கு --
ராக்ஷச பக்ஷிக்கோ --
ஒரு இனம் அழிய வேண்டும்.

கொசுவை ஒழிப்பதில் காட்டும்

தீவிரத்தைக் கூட
நாம்
காட்டவில்லையே
நம் இனத்தைக் காப்பதில்.


வார்ப்பு கவிதையிதழில் வெளிவந்தது. [http://www.vaarppu.com/padam_varikal.php?id=36]