முட்டை உடைந்து வெளியேறிய
இடம் பொருள்
உன் நினைவில் உள்ளதன்
மறைநிலை
நீ வாழும் ஆழ்கடலில் கண்டால்
சிற்றாமைப் பெண்ணே!
ஆங்கே ---
முன்முகஐவர் வழி
வன்புகையோ காட்சியோ குடியோ தீயுணவோ
மடல்கொண்ட இரண்டினால், ஓட்டினுள்காண் ஒன்றினால்
எண்ணற்ற கீழ்மொழியோ
எண்ணமோ
கண்டது கடையது எனப் பலப்பல
இட்டும்
சிலர் நெடுநாளும் ---
நன்மையே உண்டும் அகத்தீடு கொண்டும்
பிறர் போற்ற வாழ்ந்தும்
சிலர்
புற்றினாலும் உள்ளகம் நின்றும்
பன்னோய்களாலும் இடர்வினாலும்
சில காலமே
வாழ்வதன் காரணம் ---
முன்னோர் ஆசியா பெற்றோர் தவமா
இறையருளா
ஓடுநீர் உள்ளுறை மரபணுவா
வெறும் நல்வாய்ப்பா
என்னவென்று தேடிக் கண்டு
பின்னாள் முட்டை வைக்க
வருந்தருணம் இதேயிடத்தில்
கூறிவிடு
என்னைப் பாட்டன் என்பானிடம்.
No comments:
Post a Comment