Sunday, November 22, 2026

நவம்பர் 2026 -- 2

ஆடு பாம்பே! விளையாடு பாம்பே! (2 முறை)

(நம்) பட்டறிவு கேட்டறிவு பகுத்தறிவு  இயல்பூக்கம்  முன்னோர் வாசத்தால் 

அந்தக்கரணத்தால்  (மனம் புத்தி சித்தம் அகங்காரத்தால்)

ஊரும் எண்ணங்களை அக்கண சமயத்தே

தேர்வற்ற விழிப்போடு (அதன்) இயல்பில் இயங்க விடு

         ஐம்புலன்கண் நுழைவோரை நுழையவிடும் தேர்வினை

             உள்ளுக்குள் சுரப்போரை          உள்ளுக்குள் இருப்போரை

            வாழ்வின் தேர்வுகளை         எடுக்கும் முடிவுகளை         

             நிகழ்த்தும் வினைகளை     (நாம்) கூறும் சொற்களை

இயற்கைப் பேரறிவால்  சான்றோர் ஞானத்தால்

உந்தன் கருணையால்/ அருளால்/ சித்தத்தால்/ அந்தக்கரணங்களால்

அக்கண சமயத்தே     தேர்வற்ற விழிப்போடு முழுமையாய் நோக்கு

முழுமையாய் நோக்கி     விழிப்புடன் (முழுமையாய்) செயல்படு

நான் கரைந்து ஆடு! நீ நான் கரைந்து ஆடு

உள்கடந்து சும்மாயிரு, நீ உள்கடந்து சும்மாயிரு!

எண்ணமும் வாக்கும் செயலும் ஒத்து வினை நிகழ்த்து

ஆடு பாம்பே! விளையாடு பாம்பே!

            இன்னபிற காலத்தே         (நமையாளும்) உள்ளுறுப்புகள் போற்றி 

           செய்யற்குகா செயாது            செயற்கரிய செய்வித்து 

ஆடு பாம்பே! விளையாடு பாம்பே! 

No comments:

Post a Comment