என்னவொரு வாசம்!
வேப்பம் பூவைப் பறித்து ரசம் வைத்தால்
நன்றாக இருக்கும்.
எட்ட உள்ளதே! ஏறிடலாமா?
விழுந்து விட்டால்?
உதிர்ந்த பின் பெருக்கிக் கொள்வோம். ஆனால் --
இப்போதே எடுத்தால்
மலர்ச்சியுடன் இருக்குமே!
காற்றில் கொத்தாய் அவை ஆடும்போது
கொள்ளை அழகு!
அருகில்
நடனமாடிய இரு தேனீக்கள்
பூவைச் சுற்றிப் போயின.
கீழே விழட்டும், பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment