1.
விண்ணில் வழி கண்டு
நீரில் கூடும் வரித்தலை வாத்தே!
நீயறிந்த பாதைதனில்
தனையறியுந் தந்திரங் காணா(து)
தரணியாளுந் தகுதியுடை
மாந்தர் உளரோ!
2.
தோல்குருவீ!
ஆட்டத்தில் இழந்து
விலையாக உயிர் தரத் துடிக்கும்
குழியில் வீழ்ந்த
(இவ்) எறும்பைக் காத்திட
வழி ஏதேனும்
முக்கடல் தாவி மும்மாதம் கடந்து
நீ வந்த பாதைதனில்
உளதா என
பரந்த இவ்வேரிக் கரையில்
தன் கன்றைக் காக்க
முறைத்து நிற்கும் எருதுகளிட்ட
சாணம் காயுமுன் கூறிவிடு.